இளம் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கோலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் பிகாஷ் (32). இவருக்கும் சகரிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

பிகாஷ் கொல்கத்தாவில் பிளம்பராக பணிபுரிந்த நிலையில் ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே தனது வீட்டுக்கு வருவார்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த சகரிகாவுக்கு சுரேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்த தொடர்பை பிகாஷின் பெற்றோர் சமீபத்தில் கண்டுப்பிடித்ததோடு இது குறித்து மகனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக தனது வீட்டுக்கு வந்த பிகாஷ் இது குறித்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

அதற்கு, தான் சுரேஷை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சகரிகா கூறினார்.

மேலும், விருப்பம் கொண்டவருடன் சேர்ந்து வாழ்வது தவறில்லை என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என கூறினார். இதை கேட்டு பிகாஷ் அதிரடி முடிவை எடுத்தார்.

அதன்படி தனது மனைவி சகரிகாவை அவரின் காதலன் சுரேஷுக்கே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இது குறித்து தனது குடும்பத்தார் மற்றும் சகரிகா குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் பெற்றார்.

இதன் பின்னர் பிகாஷ் முன்னிலையிலேயே சுரேஷ் - சகரிகா திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் சுகரிகா தனது குழந்தையை உடன் அழைத்து சென்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்