உலக நாயகன் கமல் ஹாசன் விடுத்த முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

உடல் உறுப்புகளை தானம் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம் திகதி பிறந்தார். இன்று அவருக்கு 64வது பிறந்தநாளாகும்.

முன்னதாக, தனது பிறந்தநாளை முன்னிட்டு 7ம் திகதி முதல் 9ம் திகதி வரையில், ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில், ‘எனது பிறந்தநாளன்று ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை பார்ப்பதற்கு வருவதை தவிர்த்து, நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நானும் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த உள்ளோம். நமது பணியை சிறப்பாக செய்தால் வரலாறு தானாக உருவாகும்’

இந்நிலையில், இன்று அதிகாலை மக்கள் நீதி மய்யத்தின் டுவிட்டர் பக்கத்தில், உடல்உறுப்பு தானம் செய்வோர் அணுக வேண்டிய முகவரி குறித்து பதிவிடப்பட்டது.

அதில் கூறியிருப்பது, ‘நம்மவர் அவர்களின் பிறந்த நாளான இன்று, புதிதாக பிறக்கவிருக்கும் தமிழ்நாட்டிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, உடல் உறுப்பு தானம் செய்து தெரிவிக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers