தாயின் கண்முன்னே துடிதுடித்து பலியான சிறுவன்! சோக சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் அரியலூரில் தாயின் கண்முன்னே சாலையை கடக்க முயன்ற போது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரின் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், லாரி டிரைவரான இவரது மனைவி சரோஜினி, இவர்களது மகன் பார்க்கவன்(வயது 4).

சம்பவதினத்தன்று சரோஜினி தனது மகனுடன் பெரியநாகலூர் கிராமத்திலிருந்து ஜெயம்கொண்டம் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது பார்க்கவின் பெரியம்மாவை பார்த்ததும், தாயின் கையை விட்டுவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளான்.

எதிர்பாராதவிதமாக அங்கு வந்த டிம்பர் லாரி மோதி தாயின் கண்முன்னே துடிதுடித்து பலியானான்.

இதனைதொடர்ந்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், இந்த ஏரியாவில் அதிகளவு சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் அதிகளவில் இருக்கிறது.

இதனால் லாரிகள் பயன்படுத்தப்படுவதால் விபத்துகள் அதிகம் நடக்கிறது, மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர், இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

மேலும் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்