நடுவானில் பழுதான விமானத்தின் இன்ஜின்! 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்த விமானம்..உயிர் பயத்தில் இருந்த பயணிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை புறப்பட்ட இன்டிகோ விமானம் 47 பயணிகளுடன் பயணித்தது.

மாலை 6 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போதே, விமானத்தில் இன்ஜின்களில் ஒன்று பழுதாகிவிட்டது.

அப்போது ஒரே இன்ஜின் உதவியுடன் விமானத்தைத் தறை இறக்குவது கடினம் என்பதால், விமானி, தாமதிக்காமல் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விமானம் அவசரமாகத் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். விமான நிலைய ஓடுபாதையைச் சுற்றிலும் தீயணைப்பு வாகனம், மருத்துவ குழுவினர் என அனைவரும் தயாராக நிறுத்தப்பட்டனர்.

அதையடுத்து சுமார் அரை மணிநேரம் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம், 6.30 மணியளவில் பத்திரமாகத் தரையிறங்கியது.

அதில் பயணம் செய்த 47 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் அரை மணிநேரம் அவர்கள் உயிர்பயத்தில் இருந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இன்ஜினில் போதுமான ஆயில் இல்லாததால், பழுதானதாகத் தெரியவந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்