3 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து நரபலி: கொடூர சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

சக்தி கிடைக்கும் என்பதற்காக மூன்று வயது சிறுமியை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையின் விராலிமலை தொகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இதில் மூத்த மகளான ஷாலினி(வயது 3) கடந்த 25ம் திகதி முதல் காணாமல் போனார், எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வீட்டிற்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார், ஷாலினியை பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர்.

பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதியான சிங்காரம் மனைவி சின்னப்பிள்ளை மீது சந்தேகம் வலுத்தது.

அவரிடம் விசாரணை நடத்தியதில் முதலில் தான் செய்யவில்லை என மறுத்தவர், பின் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குழந்தையின் ரத்தத்தில் பூஜை செய்தால் சக்தி அதிகரிக்கும் என நினைத்து இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

இவரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்