நள்ளிரவில் உதவ யாரும் முன்வரவில்லை.... நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட மொடல்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டில் வைத்து ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தியது ஏன் என விளக்கமளித்துள்ளார் பிரபல மொடல் மேகா ஷர்மா.

நள்ளிரவில் எவரும் உதவிக்கு முன்வரவில்லை என்பதால் மனமுடைந்த தாம் ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் குடியிருப்பு காவலர்களை அவர் தாக்கியதாகவும், அவர் பெயரில் வழக்குப் பதிய வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது குடியிருப்பில் உள்ள லிஃப்டில் வைத்து காவலர்களோடும் பொலிசாரோடும் வாக்குவாதத்தில் ஈடுபடு மொடல் மேகா ஷர்மா, பின்னர் ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது செயலுக்கு விளக்கமளித்துள்ள அவர், நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு காவலர்கள் எவரும் உதவிக்கு வரவில்லை எனவும்,

இரவு உடையுடனே தம்மை தெருவில் செல்ல அனுமதித்த காவலர்களின் செயலில் மனமுடைந்தே தாம் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மும்பை மாநகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் இச்சம்பவம் நடந்துள்ளது.

நள்ளிரவு நேரம் தமக்கு சிகரெட் வேண்டும் எனக் கூறி மொடல் மேகா அந்த குடியிருப்பின் காவலர்களிடம் கோரியுள்ளார்.

பலமுறை தகவல் தெரிவித்தும் அவர்கள் உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மேகா, காவலர்கள் பகுதிக்கு வந்து அவர்களை மிரட்டியுள்ளார்.

மட்டுமின்றி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால் சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசாரிடம், பெண் காவலர் இன்றி தாம் காவல் நிலையத்தில் வர முடியாது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமது குடியிருப்புக்கு செல்ல முயன்ற மொடலை பொலிசாரும், குடியிருப்பு காவலர்களும் தடுத்துள்ளனர்.

இதனையடுத்தே அவர் ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்