உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இஸ்லாமியர்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது மதத்தின் பெயரால் கொடூர தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் கூட்டாக தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சீதாமாரி பகுதியில் கடந்த அக்டோபர் 20 ஆம் திகதி துர்கா பூஜை ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த பகுதியில் அனுமதி மறுக்கப்படவே இரண்டு பிரிவினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சய்னுல் அன்சாரி (80) தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திருப்பிய நிலையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

எரித்து கொலை செய்யப்பட்டு இரண்டு தினங்களுக்கு பின்னரே அது அன்சாரி என்று தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 38 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டு இருக்கிறது.

மாட்டு இறைச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த நிலையில் தற்போது மீண்டும் வடமாநிலத்தில் இஸ்லாமியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers