சம்மதத்துடன் ஒருமித்த உறவுகொண்டேன்: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் அமைச்சர் அக்பர் - பெண் பத்திரிகையாளர் விவகாரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ விவகாரம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 20 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் வெளியானது

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பல்லவி கோகோய் அளித்த புகார் குறித்து எம்.ஜே. அக்பர் விளக்கம் அளித்தார்.

பத்திரிக்கையாளர் பல்லவி கோகாய் கூறியுள்ள புகாரில் எதுவும் உண்மையில்லை, இதுபோன்று யாரையும் நான் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை, அவருடன் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன்.

சில மாதங்கள் இது தொடர்ந்தது. எனினும் இதனால் என் குடும்பத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து அந்த உறவை கைவிட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பல்லவி வெளியிட்டுள்ள செய்தியில், என் வாழ்வின் மிக வலி நிறைந்த நினைவுகளை நான் மீண்டும் வெளிகொண்டு வந்தேன்.

உடல்ரீதியில், பாலியல் ரீதியில் நான் பாலியல் தாக்குதலுக்கு ஆளான செய்தி தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியானது. நான் எனது 20 வயது தொடக்கத்தில் இருந்தேன். வளர்ந்து வரும் பத்திரிகையாளராக இருந்தேன். அவர் தலைமையிலான பத்திரிகையில் ஓர் ஊழியராக பணியில் இருந்தேன்.

அதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, பெண்களை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல் செய்யும் சில பிரபலமடையாத நபர்களை போன்று அக்பர் தன்னை வெளிப்படுத்தினார். அது கருத்தொருமித்த உறவு என்கிறார். அது இல்லை. அது வலுகட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தினால் ஏற்பட்ட உறவு.

என்னை பற்றி வெளியான செய்தியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக உள்ளேன். தொடர்ந்து எனது உண்மையை நான் பேசுவேன். இதனால் அவரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பிற பெண்களும் முன்வந்து அவர்களது உண்மைகளை பற்றி பேசுவர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்