இந்திய காட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி: சிக்கிய கடிதம்

Report Print Vijay Amburore in இந்தியா

பீகார் மாநிலம், போத்கயா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் போத்கயா மாவட்டத்தில் உள்ள புனித கோவில் பகுதி வழியாக சென்ற உள்ளுரை சேர்ந்த நபர், சுற்றுலா பயணி ஒருவர் சடலமாக மரத்தில் தொங்குவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவருடைய உடலை மீட்டு அனகிரா நாராயண் மகாத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அவருடைய உடமைகளை கைப்பற்றிய பொலிஸார் ஆராய்ந்தபோது, அதில் செல்போன் எண்ணுடன், தகவலை என்னுடைய சகோதரிக்கு தெரியப்படுத்திவிடுங்கள் என எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

பின்னர் இதுபற்றி தகவல் தெரிவித்த பொலிஸார் தற்கொலை செய்துகொண்ட நபர் பற்றி மேற்கொண்ட விசாரணையில், சிட்னி நகரத்தை சேர்ந்த ஹீத் ஆலன் (33) என்பது தெரியவந்தது.

ஆனால் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்