திருமணமான இரண்டு மாதத்தில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் பூலாங்குடியிருப்பு இந்திராநகரை சேர்ந்தவர் சின்னதுரை. அ.தி.மு.க பிரமுகரான இவரது மகள் நந்தினி (24). இவருக்கும் பாலசந்தர் என்பவருக்கும் கடந்த 29-8-2018 அன்று திருமணம் நடைபெற்றது. பாலசந்தர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

திருமணமானதும் சென்னையில் கணவருடன் வசித்து வந்த நந்தினி கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று நந்தினியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்தார்கள்.

இதில் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த சில நாட்களாக நந்தினி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையில், நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு மருத்துவமனை முன்பு அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்