கழிவறையில் நைசாக குழந்தை பெற்ற இளம் பெண்: அடுத்து செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் தனியார் மருத்துவமனை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து அங்கேயே விட்டுச் சென்ற பெண்ணை பொலிசார் தேடி கண்டுபிடித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்றிரவு 12 மணிக்கு நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் வந்துள்ளார், அவருடன் 4 ஆண் நண்பர்கள் கூட வந்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இன்று அல்லது நாளை குழந்தை பிறக்கும் என கூறினார்கள்.

அந்நேரம் பார்த்து இளம்பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது, அதனால் பாத்ரூம் போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்

பாத்ரூமுக்குள் போனவர் வெளியே வரவே இல்லை, அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த அந்த பெண் காத்து கொண்டிருந்த ஆண் நண்பர்களிடம், வாங்க வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி வேகவேகமாக கிளம்பி சென்றுள்ளார்.

விடிகாலை கொஞ்ச நேரம் கழித்து பாத்ரூமில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவும் எல்லோரும் ஓடிச் சென்று பார்த்திருக்கிறார்கள்.

அப்போது தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இருந்தை ஒரு வாளிக்குள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில், சிசிடிவி மூலம் இளம்பெண் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து அவரிடம் விசாரித்ததில், என் பெயர் நித்யா. நான் ஒரு வக்கீல். காரைக்குடியில் என் ஃப்ரண்டு கல்யாணத்துக்கு போனேன். அப்போ எனக்கு ஜூஸ் கொடுத்தாங்க. அதை குடிச்சிட்டு மயங்கி விழுந்துட்டேன். அதுக்கு அப்பறம் என்ன நடந்ததுன்னே தெரியல.

நான் கர்ப்பமாக இருக்கிற விடயம் கூட எனக்கு உடனே தெரியாது. மெதுவாகத்தான் தெரிஞ்சது.

அதனால பாத்ரூம் போய் என் வாயில துணியை அடைச்சி வச்சிக்கிட்டு, குழந்தையை பெற்றேன். பெற்ற குழந்தையை அங்க இருந்த ஒரு வாளியில் வைத்து மூடிவிட்டு வந்துட்டேன்.

என் அம்மா, அப்பா ஊரில் இருக்கிறார்கள், அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான் இவ்வளவும் சொல்லி முடித்தபின், நித்யா பெற்ற குழந்தையை தானே வளர்ப்பதாக என்று சொல்லி குழந்தையை வாங்கி சென்றிருக்கிறார், என்றாலும் இந்த சம்பவம் குறித்து நித்யாவிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்