மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொன்ற நபர்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான உண்மை.. திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி சாதனா, தம்பதிக்கு சுபன் என்ற மகனும், நையினா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நையினா கடந்த 2016 ஜூலை மாதம் அங்குள்ள நதி ஓரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார் பிரகாஷ், சாதனா, சுபன் ஆகியோர் மாயமானதை கண்டுப்பிடித்தனர்.

இதைவைத்து நையினாவை மூவரும் சேர்ந்து கெளரவ கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என கருதிய பொலிசார் அதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அந்த குடும்பத்தை சேர்ந்த நால்வரையும் அபிஷேக் என்ற தனி நபர் கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, அபிஷேக்கின் கூட்டாளியான 16 வயது சிறுவன் சமீபத்தில் விபத்தில் இறந்தான்.

இறப்பதற்கு முன்னர் குடிபோதையில் தன்னுடன் இருந்தவர்களிடம் இது பற்றி அவன் கூறியுள்ளான்.

இதையடுத்து இது பொலிசாருக்கு தெரியவந்தது. இதன் பின்னர் கொலையாளி அபிஷேக்கை பொலிசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பொலிசார் கூறுகையில், கடந்த 2015-ல் அபிஷேக் மற்றும் பிரகாஷின் பொது நண்பர் ஒருவருக்கு பிரகாஷ் ரூ.4 லட்சம் கடன் கொடுத்தார்,

இந்த பணத்துக்கு அபிஷேக் உத்தரவாதம் அளித்து இருந்தார்.

கடன் தொகையின் வட்டி ஏறி ரூ.8 லட்சம் ஆனது. ஆனால் அவரால் அதை திரும்ப தரமுடியவில்லை.

இதையடுத்து அபிஷேக் மற்றும் அவர் நண்பரிடம் பிரகாஷ் பணத்தை திரும்பி கேட்டுள்ளார்.

இதையடுத்து அபிஷேக், அந்த நண்பர், மற்றும் அவர்களின் நண்பரான 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து அபிஷேக்கை கொல்ல முடிவெடுத்தனர்.

அதன்படி காரில் அபிஷேக்கை அழைத்து சென்று சென்று மூவரும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

இதை அபிஷேக்கின் மனைவி மற்றும் பிள்ளைகள் பார்த்துவிட்டதால் அவர்களையும் கொன்றுள்ளார்கள்.

பின்னர் நால்வரின் சடலத்தையும் அங்குள்ள நதியில் போட்டுள்ளார்கள், இதில் நையினாவின் சடலம் மட்டும் கிடைத்துள்ளது.

மற்ற மூவரின் சடலங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்