சொந்த அண்ணியை தலையில் அடித்து கொலை செய்த கொழுந்தன்: அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் மது போதையில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யநாராயணா. இவர் மனைவி மாதவி.

சத்யநாரயணாவின் சகோதரர் ஸ்ரீனிவாஸ். இவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி, ஸ்ரீனிவாஸை பிரிந்து சென்றுவிட்டார்.

இதிலிருந்து குடிக்கு அடிமையான ஸ்ரீனிவாஸ் பித்து பிடித்தவர் போல இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று குடி போதையில் ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரின் அண்ணியான மாதவி சாலை ஓரத்தில் உட்கார்ந்து பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார்.

இதையடுத்து சாலையில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவு தருவதாக கூறி மாதவியிடம், ஸ்ரீனிவாஸ் சண்டை போட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் அருகில் இருந்த கொம்பால் மாதவி தலையில் ஓங்கி அடிக்க ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து மாதவி சடலத்தை கைப்பற்றியதோடு, ஸ்ரீனிவாஸையும் கைது செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers