திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
335Shares

தமிழகத்தில் திருமணம் நிச்சயம் ஆன பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவிடைமருதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வசந்தபிரியா நேற்று மாலை கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளி முடிந்ததும் வசந்தபிரியா ஒருவரது பைக்கில் உட்கார்ந்து போனார் என சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த இளைஞரை ஆசிரியை குடும்பத்தில் காட்டி, இளைஞரை யார் என்று கேட்டனர்.

அதற்கு அந்த இளைஞர் உறவினர் தான் என்றும், வசந்தபிரியாவின் அத்தை மகன் நந்தகுமார் என்றும் சொன்னார்கள்.

மேலும், நந்தகுமாரும், வசந்தபிரியாவும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து நந்தகுமாரை பொலிசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்தோம்.

எனக்கு சரியான வேலை அமையாததால் என்னிடம் பழக கூடாது என அவள் வீட்டில் தடை போட்டார்கள்.

ஆனாலும், வசந்தபிரியா என்னிடம், நம்மை யாரும் பிரிக்க முடியாது, நாம் கல்யாணம் கண்டிப்பா செய்துக்கலாம் என்றாள்.

அவள் சொன்னது அனைத்தையும் நம்பினேன். ஆனால் கொஞச நாளாகவே என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தாள். என்னால் அதை தாங்கவே முடியவில்லை. இதனிடையே அவளுக்கு வீட்டில் வேறு ஒரு இடத்தில் நிச்சயமும் ஆகிவிட்டதை கேள்விப்பட்டேன்.

அதனால் வசந்த பிரியாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி அவளை தனியாக பைக்கில் அழைத்து சென்றேன். காவிரிக்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

நீ இல்லாமல் இருக்க முடியாது,கல்யாணம் செய்துக்கலாம் என்றேன். அதற்கு அவள் மறுத்துவிட்டாள். அந்த கோபத்தில்தான் கையிலிருந்த கத்தியால் அவளை அறுத்து கொன்றேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்