ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம்: கணவரும் பிரபல மொடலும் கைது

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பவான பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட நிலையில், டெல்லி பொலிசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஆசிரியரின் கணவர் 38 வயதான மண்ஜித் மற்றும் அவரது காதலியும் பிரபல மொடலுமான ஏஞ்சல் குப்தா என்பவர்களே கைதானவர்கள்.

டெல்லியில் செயல்பட்டுவரும் பிரபல மொடலான ஏஞ்சல் குப்தாவை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டே மண்ஜித் தமது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி ஏஞ்சலுடன் தமது கணவருக்கு ஏற்பட்டிருந்த உறவுக்கு ஆசிரியை சுனிதா எதிர்ப்பு தெரிவித்ததே இந்த கொலைக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் பகுதியில் துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுனிதா.

கடந்த திங்களன்று தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

சுனிதாவை யார் கொலை செய்தார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் வாடகை கொலைகாரர்கள் இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட சுனிதாவை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். சம்பவப்பகுதியில் இருந்து சுனிதாவின் மொபைலும் பணம் இருந்த பை ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே சுனிதா எழுதியதாக கருதப்படும் கடிதம் தொடர்பில் அவரது மகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் மண்ஜித் மற்றும் ஏஞ்சல் தொடர்பான உறவு குறித்து சுனிதாவின் பெற்றோரே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்