அப்பெண்ணின் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக்கொண்டேன்! மத்திய அமைச்சர் விளக்கம்... மனைவி ஆதரவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ விவகாரம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் வெளியானது

இந்தநிலையில் பத்திரிக்கையாளர் பல்லவி கோகோய் அளித்த புகார் குறித்து எம்.ஜே. அக்பர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பத்திரிக்கையாளர் பல்லவி கோகாய் கூறியுள்ள புகாரில் எதுவும் உண்மையில்லை, இதுபோன்று யாரையும் நான் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை, அவருடன் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன்.

சில மாதங்கள் இது தொடர்ந்தது. எனினும் இதனால் என் குடும்பத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து அந்த உறவை கைவிட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து எம்.ஜே. அக்பரின் மனைவி மல்லிகாவும் தனியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், மல்லிகா கூறுகையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரையில் பல்லவி கோகோய் கூறியுள்ள தகவல்கள் முழுமையான பொய்.

1994-ம் ஆண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவி கோகாயால் எங்கள் வீட்டில் சண்டையும், சச்சரவுகளும் எழுந்தன.

பின் இரவுகளுக்கு பிறகும் எனது கணவருக்கு அவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து வரும் தகவல்கள் மூலம் பல்லவி கோகாய் பற்றி எனக்கு தெரிய வந்தது.

பல்லவி எதனால் பொய் சொல்கிறார் என தெரியவில்லை. எனினும் அவர் கூறுவது முழுமையான பொய் என மல்லிகா கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்