கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட தமிழிசை செளந்தர்ராஜன்: அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சி

Report Print Santhan in இந்தியா

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால், தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பலராலும் அறியப்பட்ட நபர், ஆனால் இவருடைய பெயருக்கு பின்னால் இருக்கும் செளந்தர்ராஜன், அவருடைய கணவர் எப்படி இருப்பார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழிசையும் தன்னுடைய கணவரின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய திருமண நாளன்று தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ. பட்டமும், கனடாவில் மருத்துவப் பயிற்சியும் பெற்றவர்.

இவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன், சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்