மனைவிக்கு போதையில் இருந்த இருவரால் ஏற்பட்ட பிரச்சனை: தட்டிகேட்ட கணவனுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் மனைவியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட மீனவரை திருக்கை மீன் முள்ளால் குத்தி கொலை செய்த கொலையாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் கீழக்கரை கடற்கரை மீனவர் குப்பத்தை சேர்ந்தவர்கள் முத்துகுமார் மற்றும் நாகராஜ்.

இவர்கள் இருவரும் நேற்றிரவு ஆனந்த் என்பவரது வீட்டின் முன்பாக நின்று குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதையடுத்து அங்கு ஆனந்தின் மனைவி சத்யா வந்துள்ளார். பின்னர் முத்துகுமார் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரையும் அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சத்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஆனந்த், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் திருக்கை மீன் முல்லை எடுத்துவந்து ஆனந்தை குத்திக் கொலை செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கொலையாளிகளான முத்துகுமார் மற்றும் நாகராஜை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்