சின்மயி ஒரு....ஆபாசமான வார்த்தையால் திட்டிய பிராமண சங்க தலைவர்: வைரலான ஆடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கூறிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் 'ME TOO' ஹேஸ்டேக் மூலம் சின்மயி வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கீழ் தரமான பாலியல் தொந்தரவுகளைக் கொடுத்ததாக பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த தகவலை வெளியிட்ட சின்மயி, பிராமணர் சங்க பிரதிநிதிகள் நாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாராயணனை சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகக்கோரி பிராமணர் சங்க பிரதிநிதிகள் குரல் எழுப்பியுள்ளனர். அப்போது பிராமணர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஒருவருக்கும், நாராயணனுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில், சின்மயியை ஐயங்கார் தே**** என்றும், அவர் கூறுவதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நாராயணன் மிக ஆபாசமாகப் பேசியுள்ளார். அந்த ஆடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆடியோவை கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்