மணப்பெண்ணை பார்க்க ஆசையாக ஹொட்டலுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி: வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் மணப்பெண்ணை பார்க்க சென்ற நபரிடம் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதையடுத்து பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காளிசரன் என்பவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். 42 வயதான இவருக்கு பெண் தேடும் படலம் நீண்ட காலமாக நடந்துவருகிறது.

தன்னுடைய முழு விவரங்கள், ஜாதகம் ஆகியவற்றை தனியார் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், காளிசரணுக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண், `உங்களின் ஜாதகம், முழுத் தகவல்களை எல்லாம் பார்த்தோம். உங்களின் புகைப்படத்தையும் பார்த்தோம். மணப்பெண்ணுக்குப் பிடித்துள்ளது.

வடபழனில் உள்ள ஒரு ஹொட்டல் அறைக்கு வாருங்கள் என கூறியுள்ளனர். மணப்பெண்ணைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றுள்ளார். அப்போது, அன்போடு வரவேற்று உபசரித்த பெண் மற்றும் இரண்டு ஆண்கள் திடீரென காளிசரணைத் தாக்கினர்.

பிறகு அவரிடமிருந்து ஐ போன், நகைகள் ஆகியவற்றைப் பறித்துவிட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து காளிசரண் வடபழனி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் நடத்தப்பட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கேரளா, கொச்சியைச் சேர்ந்த சாவித்திரி மற்றும் அவரின் மகன் சிவா, சாவித்திரியின் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேர்தான் காளிசரணை ஏமாற்றி நகைகள், செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர்.

கைதான 3 பேரிடம் விசாரித்தபோது தனியார் திருமணத் தகவல் இணையதளங்களில் மணப்பெண் தேவை என்று பதிவு செய்தவர்களின் விவரங்களை சேகரிப்போம். பிறகு அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ளோம்.

பேசும்போதே அவர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரித்துவிடுவோம். பெரும்பாலும் நீண்ட காலமாக திருமணமாகாத வாலிபர்களை குறி வைத்து ஏமாற்றுவோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதுவரை, 50 ஆண்களை ஏமாற்றியுள்ளார் சாவித்திரி.

காளிசரண், மணப்பெண்ணைப் பார்க்க ஆசையாக ஹொட்டலுக்கு சென்றபோது, அங்கு இருந்த சாவித்திரி, நான்தான் மணப்பெண்ணின் அம்மா, நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள், சொந்த வீடு இருக்கிறதா, உங்களின் பூர்வீகம் எது என்று எல்லாவற்றையும் விசாரித்துள்ளார்.

அவர்களின் பேச்சை நம்பிய காளிசரணும் முழுவிவரங்களைத் தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் சிவாவும் கோகுலகிருஷ்ணனும் சேர்ந்து காளிசரணைத் தாக்கியுள்ளனர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்