நடுவானில் நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: நொடியில் நடந்த மாற்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடுவானில் நேருக்கு நேர் இரண்டு விமானங்கள் மோதவிருந்த நிலையில் 45 வினாடிகளில் இந்த விபத்து தடுக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கவுகாத்தி நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதேபோன்று கவுகாத்தியில் இருந்து கொல்கத்தா நோக்கி மற்றொரு இண்டிகோ விமானம் பறந்து சென்று கொண்டு இருந்தது.

இந்நிலையில், கொல்கத்தா நோக்கி சென்ற விமானம் வங்காளதேச வான்வெளியில் 36 ஆயிரம் அடியில் பறந்து கொண்டு இருந்தது. மற்றொரு விமானம் இந்திய வான்வெளியில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

வங்காளதேச வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேட்டு கொண்டதற்கேற்ப கொல்கத்தா விமானம் 35 ஆயிரம் அடியில் பறக்க தொடங்கியது. இதனால் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை கவனித்த கொல்கத்தா வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனடியாக சென்னையில் இருந்து சென்ற விமானம் வலதுபுறம் திரும்பி செல்ல உத்தரவிட்டார்.

இரு விமானங்களும் மோதுவதற்கு 45 வினாடிகள் இருந்த சூழ்நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்