சின்மயி விவகாரம்: தந்தைக்கு ஆதரவாக முதன் முறையாக பதிலளித்த வைரமுத்துவின் மகன்

Report Print Arbin Arbin in இந்தியா

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு இதுநாள் வரை மெளனம் காத்துவந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி, முதன் முறையாக தமது தந்தைக்கு ஆதரவாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சந்தியா மோகன் மற்றும் பாடகி சின்மயி ஆகியோரால் தமிழகத்தில் வீசிய மீ டூ புயலில் சிக்கிய பல பிரபலங்களில் கவிஞர் வைரமுத்துவும் ஒருவர்.

சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தம்மை வைரமுத்து படுக்கைக்கு அழைத்ததாக சின்மயி வெளியிட்ட தகவல் தமிழ் திரையுலகில் புயலை கிளப்பியது.

தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வைரமுத்துவும் காணொளி ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்தார்.

ஆனால் அந்த விவகாரம் தொடர்பில் அவரது மகன்கள் மற்றும் வைரமுத்துவின் மனைவி பொன்மணி ஆகியோரிடம் இருந்து எந்த பதிலும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி முதன் முறையாக தமது தந்தைக்கு ஆதரவாக கருத்து ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிக்காக லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய அந்த பாடலை இணைத்துள்ள மதன் கார்க்கி, பொய்கள் புயல்போல் வீசும் - ஆனால், உண்மை மெதுவாய் பேசும் என்ற வரிகளை கோடிட்டும் காட்டியுள்ளார்.

இது சின்மயி தொடர்பான பாலியல் புகாருக்கு தமது தந்தைக்கு ஆதரவாக தாம் இருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக மேடைப்பாடகி ஒருவரும் வைரமுத்துவால் தமது திரைப்பட கனவு அடியோடு சிதைந்தது எனவும்,

மலேசியாவுக்கு செல்ல மறுத்ததால், வாய்ப்புகள் பலவற்றையும் வைரமுத்து தட்டிப்பறித்தார் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்