வீட்டிலிருந்து வெளியான கருகிய வாசம்: கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கிடந்த பாடகி

Report Print Vijay Amburore in இந்தியா

ஹைதராபாத் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஹைதரபாத் மாநிலம் ஒவைசி காலணி அருகே உள்ள வீட்டில் இருந்து கருகிய வாசம் வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனியா பேகம் (25) என்பது தெரியவந்துள்ளது.

திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாடகியாக இருந்த சோனியா, பார் ஒன்றில் வேலை பார்த்து வந்த சல்மான் என்ற இளைஞரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் இருவரும் ஹைதராபாத்திற்கு குடி வந்துள்ளனர். அங்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக, இளைஞர் ஒருவருடன் சோனியாவிற்கு இருந்த உறவு பற்றி சல்மான் கண்டுபிடித்து சண்டையிட்டுள்ளார். மேலும் சோனியாவை தாக்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 23-ம் தேதியன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு சல்மான் தீ வைத்து எரித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் தம்பதியினருக்கு பிறந்த 2 வயது குழந்தையை பெற்றோரின் வீட்டில் ஒப்படைத்த சல்மான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்