18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வெளியானது

Report Print Deepthi Deepthi in இந்தியா

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரிக் உத்தரவு செல்லும் என நீதிபதி உத்தவிட்டு எம்எல்ஏக்களின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

குறிப்பிட்ட 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த இருந்த தடையும் இந்தத் தீர்ப்பில் நீக்கப்பட்டுள்ளது.

இது பின்னடைவல்ல - டி.டி.வி. தினகரன்

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன், "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு அல்ல. இது எங்களுக்கு ஒரு பாடம் அவ்வளவுதான்.

18 எம்.எல்.ஏக்களை சந்தித்துவிட்டு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முதல் இணைப்பு- தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், 19 எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதில், ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ், தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18ம் தேதி வழக்குத் தொடுத்தனர்.

கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எங்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதல்வர் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில்தான் வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது.

இதனால், தமிழக அரசியலில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்