சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்! ஆதங்கமாக பேசிய பிரபல நடிகர்

Report Print Santhan in இந்தியா

பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான துளசி சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று கூறியதால், அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு பல இடங்களிலிருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இதற்கு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் துளசி, சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும்.

அதில் ஒரு துண்டை டெல்லிக்கும், மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers