விஜயகாந்த் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் சென்னை காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

இந்த வீட்டில் பசுமாடுகளை அவர் வைத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டிலிருந்த 2 பசுமாடுகள் தற்போது திருட்டு போயுள்ளது.

இதையடுத்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரையடுத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers