திருமணத்திற்கு நிர்பந்தித்த காதலி: இளைஞரின் அதிர்ச்சி முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சிவகாசியில் திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்த காதலியை கொலை செய்து கிணற்றில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிபாண்டி, இவர் கணவனைப் பிரிந்து வாழும் மாரீஸ்வரியை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில் மாரிபாண்டிக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இதையறிந்து துடித்துப்போன மாரீஸ்வரி, தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.

அதனால், இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆகி கணவனைப் பிரிந்து வாழ்பவர் என்பதால், மாரிபாண்டி அந்த திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி மாரீஸ்வரியை வெறுக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரீஸ்வரி கோபத்தில் திட்டவும் செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாரிபாண்டி, மாரீஸ்வரியைக் கொலை செய்து, வெள்ளையாபுரத்தில் உள்ள ஒரு கிணற்றில் உடலை வீசிவிட்டு தலைமறைவானார்.

அந்த வழியே சென்றவர்கள், கிணற்றில் பெண் சடலம் மிதப்பதைக் கண்டு திருத்தங்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாரியாண்டி, கொலை சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers