கணவர் இறந்த செய்தி கேட்டு மறுநிமிடமே தற்கொலை செய்துகொண்ட மனைவி: சோக சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

பீகார் மாநிலத்தில் கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த சனோஜ் குமார் என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக கல்லீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருடைய உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. வேகமாக பரிசோதனை அறைக்குள் சென்ற மருத்துவர்கள், சனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

கணவர் இறந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி ப்ரீத்தி தேவி (28), உடனடியாக மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்