நான்கு வயது தம்பியைக் கொன்ற சகோதரி: பொலிசாரிடம் தெரிவித்த பகீர் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் லுதியானாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமது 4 வயது தம்பியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லுதியானாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரேணு. இவர் தான் தமது காதலுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக கூறி தனது 4 வயது சகோதரனை கொலை செய்தவர்.

ரேணு லுதியானா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத நேரத்தில் குறித்த இளைஞர் ரேணுவின் குடியிருப்புக்கு வந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ரேணுவின் ஆண் தோழர் குடியிருப்புக்கு வந்து செல்வதை ஆன்ஷ் கனுஜியா தமது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் பெற்றோர் ரேணுவை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ரேணு பெற்றோர் இல்லாத நேரத்தில் தமது சகோதரர் அன்ஷை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

அக்டோபர் 6 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரேணுவிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

தம்பியைக் கொன்றது குறித்து வருத்தப்படவில்லை. நான் எங்கே சென்றாலும் என்னைப் பின் தொடர்ந்து வந்தான்.

எங்கள் உறவுக்கு அவன் மிகப் பெரிய தடையாக இருந்தான். இதனால், அவனைக் கொன்றது குறித்து எந்த வருத்தமும் இல்லை' என ரேணு தெரிவித்துள்ளது விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்