மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய மகன்: வெளியான பின்னணித் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் 19 வயது இளைஞர் தனது தாய், தந்தை உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய சம்பவத்தின் பின்னணித் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார் சூரஜ் வர்ம என்ற 19 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் புதன் அன்று காலை 5 மணியளவில் தேசத்தையே நடுங்க வைத்த இச்சம்பவம் வெளியானது.

காலையில் குடியிருப்புக்கு வந்த பணியாளரே சடலங்களை முதலில் பார்த்துள்ளார். உடனடியாக பொலிசாருக்கு தகவல் தரவும், சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த கொலை விவகாரத்தில் உயிர் தப்பிய சூரஜ்ஜிடம் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்கு இடையே கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த பொருளும் கொள்ளை போகாத நிலையில் சூரஜ்ஜின் வாக்குமூலம் பொலிசாருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள மூவரும் கொல்லப்பட்ட நிலையில் மகன் மட்டும் தப்பியதன் உண்மை காரணம் குறித்து தெளிவான பதிலை விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவிக்க சூரஜ் தவறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சூரஜ்ஜை கைது செய்த பொலிசார், மீண்டும் விசாரித்துள்ளனர். இதில் திடுக்கிடும் தகவலை சூரஜ் வெளியிட்டுள்ளார்.

தமது பெற்றோர் எப்போதும் கல்வியில் கவனம் செலுத்த நிர்பந்தித்ததாகவும், நண்பர்களுடன் ஊர்சுற்ற அனுமதிப்பது இல்லை எனவும் சூரஜ் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கொலை நடந்த அன்று தந்தை மிதிலேஷ் தம்மை கடுமையாக தாக்கியதாகவும், கோபமாக திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் மனமுடைந்த சூரஜ் மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து கடையில் சென்று கத்தி ஒன்றை வாங்கிய சூரஜ், அதிகாலை 3 மணியளவில் பெற்றோர் படுத்திருக்கும் அறைக்கு சென்று முதலில் தந்தையை கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மிதிலேஷின் அலறல் கேட்டு கண் விழித்த தாயார் சியாவையும், பின்னர் சகோதரி நேஹாவையும் கொலை செய்துள்ளார்.

காலை 5 மணியளவில் குடியிருப்புக்கு வந்த பணியாளரிடம், கொள்ளை சம்பவத்தினிடையே பெற்றோர் கொல்லப்பட்டுள்ளதாக நம்ப வைத்துள்ளார்.

இதனிடையே கொலைக்கு பயன்படுத்திய கத்தியில் சூரஜ்ஜின் விரல் அடையாளம் பதிந்துள்ளதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், கொலைக்கு பின்னர் ரத்தக்கறைகளை கழுவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்