வைரமுத்துவின் மோசமான செயலின் ஆடியோ ஆதாரம்: ஈழப்பெண்ணின் பதிவை வெளியிட்ட சின்மயி

Report Print Raju Raju in இந்தியா

ஈழபெண் ஒருவரிடம் வைரமுத்து போனில் மோசமாக பேசியதற்கான ஆதாரம் அப்பெண்ணிடம் உள்ளதாக அவர் எழுதிய பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி கூறினார்.

இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் ஈழப்பெண் ஒருவர் வைரமுத்துவால் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் உறவிக்கார பெண் ஐரோப்பாவிலிருந்து சென்னைக்கு விடுமுறைக்கு சென்றார்.

அப்போது வேனில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஓட்டுனர் இது தான் வைரமுத்துவின் வீடு என காட்டினார்.

உடனடியாக அவர் வைரமுத்துவை பார்க்க ஆசையாக உள்ளது என கூறினார்.

பின்னர் என் உறவுக்கார பெண், அவரின் 3 குழந்தைகள், தாய் மற்றும் மாமா வைரமுத்துவை காண சென்றனர்.

கதவை ஒரு நபர் திறந்த பின்னர் விடயத்தை கூறினார்கள். பின்னர் அங்கு வைரமுத்து வந்து அவர்களிடம் நன்றாக பேசினார்.

இதையடுத்து பெண்ணின் போன் நம்பரை வாங்கி கொண்டார்.

அடுத்தநாள் வைரமுத்து அந்த நம்பருக்கு போன் செய்து மோசமாக பேச தொடங்கினார். இதையடுத்து அவருடன் பேசுவதை நிறுத்த தொடங்கினார் என் உறவுக்கார பெண்.

ஆனால் மீண்டும் மீண்டும் போன் செய்து அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து போனில் வைரமுத்து பேசுதை அவர் ரெக்கார்ட் செய்தார்.

பின்னர் அவரை ஐரோப்பியாவுக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.

ஏனெனில் இந்த ஆடியோ ஆதாரத்தை வைத்து இந்தியாவின் சட்டப்படி தண்டனை வாங்கி தர முடியாது என்பதால், ஐரோப்பாவுக்கு வந்தால் அங்குள்ள பொலிசில் புகார் தர ஐரோப்பாவுக்கு அழைத்துள்ளார்.

நாங்கள் ஈழப்பெண்கள், இது 100 சதவீத உண்மை, எங்களிடம் இதற்கான ஆதாரம் உள்ளது என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்