மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி எரிக்க முயன்ற கணவன்: கொடூர சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவி குழந்தையை அரிவாளால் வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மன்னார்குடி பைங்காநாடு ஜெயநந்தினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

காட்டூரில் கார் பரிசோதனை மையம் நடத்தி வரும் கிசோர் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஜெயநந்தினியிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டுள்ளார். பணம் பெறுவதற்காக நந்தினியும் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கிஷோர், மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் நந்தினியிடம் பணம் கேட்டுள்ளனர். தற்போது பணம் இல்லை என நந்தினி கூற, ஆத்திரமடைந்த கிசோர் அரிவாளால் நந்தினியை வெட்டியுள்ளார். இதனையடுத்து உடனடியாக நந்தினி மற்றும் அவருடைய குழந்தையின் மீது மண்ணெண்னையை ஊற்றிய மாமியாரும், நாத்தனாரும் இருவரையும் எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

உடனே கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அங்கிருந்து தப்பித்த நந்தினி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் சம்பவம் அறிந்த வந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான கிசோர் மற்றும் அவருடைய குடும்பத்தாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்