பட்டப்பகலில் நடுவீதியில் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட நபர்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

கோயம்புத்தூரில் பட்டப்பகலில் நடுவீதியில் முதியவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்படும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த அஜ்மல் அகமது என்ற 65 வயது முதியவர். இவர் நேற்று மதியம் 1 மணிக்கு தன்னுடைய வீட்டிலிருந்து வெளியில் கிளம்பினார்.

அப்போது சாலை ஓரத்தில் மரத்திற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருந்த குற்றவாளி ரிஸ்வான், அகமத்துக்கு பின்பக்கமாக சென்று அவரை தரையில் தள்ளிவிட்டு சரமாரியாக கத்தியால் குத்த ஆரம்பித்தான்.

இதில் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் உடலில் 14 இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், அதனடிப்படையில் குற்றவாளியை கைது செய்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் ஒரு நபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers