ஒடிசா தீவிரமாக வலுப்பெற்ற டிட்லி புயல் : 3 லட்சம் வெளியேற்றம்

Report Print Kavitha in இந்தியா

வங்கக் கடலில் உருவாகியுள்ள டில்லி புயலானது ஒடிசா ஆந்திரவிற்கு இடையே கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது புயலானது வலுபெற்று க ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. மற்றும் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...