யார் இந்த இளைஞன்? பிறந்தநாளன்று காதலியை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலியை பிறந்தநாளன்று சுட்டுக் கொன்ற காதலன், சந்தேகத்தால் இந்த செயலை செய்துவிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சேகர் - மரியம்மாள். இவர்களுக்கு தமிழ் ரோஜா, சரஸ்வதி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகள் தமிழ் ரோஜா பொறியியல் படித்துள்ளார். இளைய மகள் சரஸ்வதி ர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்ஸிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

அப்போது, சென்னை கமாண்டோ பொலிஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதா, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு நடத்திய எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்ததால், நர்ஸிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.

சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கார்த்திகேயனும் கமோன்டோ பயிற்சி பெற்று 15வது பட்டாலியனில் இருந்து வந்தார். தற்போது தமிழகப் பாதுகாப்புப் பிரிவில் ஓ.டி.யாக இருந்து வருகிறார்.

சென்னைக்கு மூன்று நாள் பயணமாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வருவதையொட்டி, அவர் தங்குவதற்கு வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டார் கார்த்திகேயன்.

இந்நிலையில் அக்டோபர் 10-ஆம் திகதி சரஸ்வதிக்குப் பிறந்தநாள் என்பதால், முன் தினம் இரவு அவர் சென்னையிலிருந்து அன்னியூர்கு சென்றுள்ளார்.

அப்போது சரஸ்வதியின் பெற்றோர் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். கார்த்திவேலும், சரஸ்வதியும் ஒரு அறையில் கதவை சாத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

சமீபகாலமாகத் தன்னுடன் பேசாமல் இருபப்து குறித்து சரஸ்வதியிடம், கார்த்திகேயன் கேள்விகள் கேட்டுள்ளார். அந்த நேரத்தில் சரஸ்வதியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், சரஸ்வதியிடம் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியின் நெஞ்சில் இருமுறை சுட்டுக் கொலை செய்தார் கார்த்திகேயன்.

அதன்பின், தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சந்தேகப் பிரச்சினையால், சரஸ்வதி கொஞ்சம் காலமாகக் கார்த்திகேயனை விட்டு ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் சரஸ்வதிக்கு வேறு யாருடனோ நட்பு இருப்பதாக நினைத்து கார்த்திகேயன் அவரை கொலை செய்யும் முயற்சியோடு துப்பாக்கியுடன் வந்துள்ளனர். அதன் பின் நடந்த வாக்குவாதத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers