தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்! வைரமுத்துவின் பதில் இதோ

Report Print Vijay Amburore in இந்தியா

பிரபல பாடகியான சின்மயி வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான பாலியல் புகார் குறித்து, கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா மேனன் என்ற பெண் பத்திரிக்கையாளர், கவிஞர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அவருடைய கருத்தை ஆதரித்து பிரபல பாடகியான சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்து தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும், வைரமுத்துவின் லீலைகள் பற்றி அவருடைய அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து அவருடைய செயல்களை அம்பலப்படுத்துவேன் என கூறியிருந்தார்.

அவருடைய இந்த பதிவு சினிமா வட்டாரம் துவங்கி இணையத்தளம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என பதிவிட்டுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers