திருமணமான 3 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: சோக சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சிவகங்கையை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அன்றிலிருந்தே இருவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த தேன்மொழி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய கணவர் ரகுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்