கணவனை தாக்கிவிட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கணவனை தாக்கிவிட்டு, மனைவியை தூக்கி சென்று சிறுவர்கள் உட்பட 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அடர்ந்த வனப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, கோங்கல் பகுதியின் அருகே முரளியின் இருசக்கர வாகனம் வந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர், முரளியை தாக்கிவிட்டு அவரது மனைவியை தூக்கிச் சென்று அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான முரளி அருகில் இருந்த கிராம மக்களின் துணையுடன் வர, அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கோங்கல் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, மோகன் மற்றும் இருவர் என்று தெரியவந்தது. குறிப்பிட்ட இருவரும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஆவர்.

அதனைத் தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்த பொலிசார் அவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் மோகன், முனியசாமி இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்