பிரபல நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை கவலைக்கிடம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தேவதாஸ், மதுமதி, கங்கா ஜமுனா, லீடர், ராம் அவுர் ஷ்யாம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து காதல் மன்னனாக தேசிய அளவில் புகழ்பெற்றவர் நடிகர் திலீப் குமார்.

1950, 60-களில் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த இவர், 1994-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதையும், 2015-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.

1998-ம் ஆண்டு 'குயிலா' என்ற திரைப்படத்தில் நடித்தபின், திரையுலகிலிருந்து விலகியிருக்கிறார்.

வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு, வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுவந்தார்.

95 வயதான இவர், உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்