பெற்ற தாயாலையே 2 முறை விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை: அதிகாரிகள் எடுத்த முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

சேலம் மாவட்டத்தில் 2 முறை விற்பனை செய்யப்பட்ட குழந்தையை, சித்தியிடம் இருந்து மீட்ட பொலிசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் பாலு (55). முதல் மனைவி இறந்து விட்டதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ஓபுராணி(43) என்ற பெண்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மூலமாக, ஈரோட்டை சேர்ந்த ஒரு குழந்தை புரோக்கரிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

புகார்கள் எழுந்த நிலையில், அந்த குழந்தை மீட்கப்பட்டு, மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஒரு மாதத்திற்கு பிறகு குழந்தையை மீண்டும் அவர் புரோக்கரிடம் விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து பாலு, தன் மனைவி மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மேச்சேரி பொலிசார் கடந்த 15 நாட்களாக குழந்தையை தேடி வந்தனர்.

இதனையறிந்த புரோக்கர், அந்த குழந்தையை ஓபுராணியின் சித்தி வாணியிடம், நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.

இதையடுத்து வாணி, மேச்சேரி காவல் நிலையம் சென்று குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers