மனைவியின் மரணம்: பிரபல விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய அரசின் உயரிய விருதுகள் பெற்ற பிரபல விஞ்ஞானி திடீரென்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் பலைகலைக்கழக துணை வேந்தராக 1994-ம் ஆண்டு முதல் 20017-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சர்வக்யா சிங் கடியார்.

இவர் என்சைமாலஜி எனும் மனித உடலில் உள்ள செல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானி ஆவார்.

நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை 2003-ம் ஆண்டும், பத்ம பூஷன் விருதை 2009-ம் ஆண்டும் இந்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில், சர்வக்யா சிங் கடியார் இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கடந்த வருடம் தனது மனைவியின் மறைவை தொடர்ந்து கடும் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த கடியார்,

’மனைவியின் மறைவு கொடுத்த வலியை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, குணப்படுத்த முடியாத உடல் உபாதைகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் அவரது உறவினர்கள் கூறினர். மனைவின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் பத்ம பூஷன் விருது பெற்ற நபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers