நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஆணை

Report Print Deepthi Deepthi in இந்தியா

திரைப்பட முன்பணத்தை திருப்பி தராவிட்டால் நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத் தயாரிப்பு நிறுவனம், தொடர்ந்த வழக்கில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து 'அரசன்' படத்தை தயாரிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தது.

மேலும். தங்களுடன் செய்து ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனால், தங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர சட்டப்படி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசன் படத்திற்காக முன்பணமாக பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும் திரைப்பட முன்பணத்தை திருப்பித்தர உத்திரவாதம் அளிக்காவிட்டால் நடிகர் சிம்புவின் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்