வைரமுத்து மீதான பாலியல் புகார் உண்மைதான்: பிரபல பாடகி சின்மயி பதிவால் அதிர்ச்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கவிஞர் வைரமுத்து மீது பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் உண்மை தான் என பாடகி சின்மயி கூறியிருப்பது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இவர் மீது பெங்களூரை சேர்ந்த சந்தியா மேனன் என்ற பெண்மணி பாலியல் புகார் அளித்துள்ளார்.

தனக்கு 18 வயது இருக்கும்போது கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் அலுவலகத்தில் ஒரு புராஜக்ட் ரீதியாக பணியாற்றியதாகவும், அவரை மரியாதையுடன் அணுகியபோதும், அவர் ஒருமுறை என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நான் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டேன் எனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரபல பாடகி சின்மயி, இந்த உண்மையான செய்தி என்றும் இது பொய்யான செய்தி கிடையாது என தனது டுவிட்டர் பக்கத்தில் அப்பெண்ணின் பதிவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers