ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொத்துக்கள் இருந்தாலும் துறவறம் வாழ்க்கையை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார்.
இதற்காக அங்குள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், குதிரையில் ஊர்வலமாக சென்ற ஸ்வேதா, தான் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி வீசினார்.
நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலம் சென்றார். ஜனவரி 19ந் தேதியன்று ஸ்வேதா தனது குடும்பத்தை விட்டு முழுமையாக துறவறம் மேற்கொள்கிறார்.