நடுரோட்டில் பழிக்குப்பழியாக இளைஞரை வெட்டி சாய்த்தபோது அசால்டாக சென்றது ஏன்? பொலிஸ் விளக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஹைதராபாத்தில் தனது மகனை கொலை செய்தவனை நடுரோட்டில் வைத்து வெட்டி சாய்த்து பழிக்குப்பழி வாங்கிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரமேஷ் (24) என்ற இளைஞர் கடந்த டிசம்பர் மாதத்தில் மகேஷ் என்பவரை ரமேஷ் கொலைசெய்துள்ளார்.

ஜாமீனில் வெளி வந்த ரமேஷை, மகன் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக மகேஷின் தந்தை கிருஷ்ணா, நடுரோட்டில் வெட்டிச் சாய்த்தார். இந்த கொலைக்கு லஷ்மண் என்பவரும் துணையாக இருந்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், சம்பவம் நடந்தபோது, பொலிஸ் வாகனம் ஒன்று கண்டும் காணமல் கடந்துசென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த டிராஃபிக் பொலிஸ் ஒருவர் மட்டுமே கொலையைத் தடுக்க முயன்றார். சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களில் சிலரும் தடுக்க முயன்றனர். சிலர் செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்ற போது பொலிஸ் வாகனம் ஒன்று அந்த இடத்தைக் கடந்தது, ஆனால் காரில் இருந்த அவர்கள் இறங்கி கொலையை தடுக்காமல், நிதானமாக வாகனத்தை நிறுத்தி விட்டே சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

இப்படி அசால்ட்டாக வந்த பொலிசார் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவ இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் டிராஃபிக் ஆகிவிடுமென்று பார்க் செய்துவிட்டு வந்தனர்.

இவர்கள்தான் இரு குற்றவாளிகளையும் கைதுசெய்தனர் என்று உயர் அதிகாரி பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்