சக நடிகையான ஆர்த்தியே இப்படி பேசலாமா? இதே சூழ்நிலை வரும்: நடிகை நிலானிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் உதவி இயக்குனர் லலித் குமார் தற்கொலை விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டதால் மனம் உடைந்த பிரபல நடிகை நிலானி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அதன் பின் அவர் தலைமறைமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர் தலைமறைவாகவில்லை, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை நிலானிக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஜெமிலா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், பொதுவாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் மன அழுத்தம், தங்களால் எதுவும் முடியாது என்ற போது தான் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

அது போன்ற முடிவை தான் நிலானியும் எடுத்துள்ளார். சமூகவலைத்தளங்களில் அவரைப் பற்றி பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தான் அவரை பெரிதும் பாதித்துள்ளது.

அதுமட்டுமின்றி சம்பந்ததப்பட்ட நபரால், நிலானி மற்றும் அவரது குழந்தைகள் எவ்வளவு சிரமங்களை சந்தித்துள்ளனர் என்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது.

இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லை, மன ரீதியான பாதிப்பில் இருந்து வெளிவரவில்லை. சில சிகிச்சைகள் இருக்கிறது. விரைவில் நலம் பெற்று திரும்புவார் என்று நம்புகிறேன், குழந்தைகளுக்காக அவர் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சமுதாயம் பெண் என்ற போது தான் அடிப்பார்கள், ஆண் என்றால் அதற்கான விமர்சனமும் குறைவு ஆண் ஒரு கல்யாணம் திருமணம் செய்து கொள்ளலாம், ஒன்பது வப்பாட்டி வைத்துக் கொள்ளலாம், அது தவறே கிடையாது.

ஆனால் அதே சமயம் ஒரு பெண் இந்த சமுதாயத்தில் இரண்டு கணவரோடு வாழமுடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்று பெண்ணுக்கு மட்டும் தான் இருக்கிறது, அதுவே ஆணுக்கு இருப்பதில்லை.

சக நடிகையான நடிகை ஆர்த்தி கூட, அவரை பார்த்தாலே தெரிகிறது என்று கூறுகிறார். எதை வைத்து இவர் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. அவங்களையே நாளைக்கு இந்த சமுதாயம் சொல்லாதா? பெண்களே ஏன் ஒரு பெண்ணிற்கு சப்போர்ட்டா இருக்கமாட்றாங்க என்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் தங்களை திருத்தி கொள்ள வேண்டும், இதே போன்ற சுழல் தங்களுக்கும் நிச்சயமாக உருவாகும், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்