திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலே குளத்தில் சடலமாக மிதந்த இளம்ஜோடி

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலே புதுமணத்தம்பதியினர் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் Bikaner அருகே Kapil Sarovar குளத்தில் இரண்டு சடலங்கள் மிதப்பதை உள்ளூர் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குளத்தில் சடலமாக மிதந்தது Surendra- Bhagwati என்ற புதுமணத்தம்பதியினர் என்பதும், இருவரும் 19 முதல் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்