என் ஜாடையில் இல்லை: மனைவியை வெட்டி கொன்றுவிட்டு, குழந்தை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

Report Print Raju Raju in இந்தியா

தஞ்சை மாவட்டத்தில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரையும், 3 மாத குழந்தையையும் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆறுமுகசாமி என்பவருக்கும் ஷீலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ரத்தீஷ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ஷீலாவின் நடத்தை மீது ஆறுமுகசாமி சந்தேகம் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் ஷீலா இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய்வீட்டில் பிரசவம் முடிந்த பின்னர் ஷீலா கணவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு வந்த ஷீலாவிடம், குழந்தை தனது ஜாடையில் இல்லை என்றும், குழந்தை தனக்கு பிறந்ததாக இருக்க முடியாது என்று ஆறுமுகசாமி சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி ஷீலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார்.

3 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கொலை நடந்ததற்கான ஆதாரங்களை திரட்டிவிட்டு ஆறுமுகசாமியைப் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்