விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஏறிச் சென்ற கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திக் திக் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உட்கார்ந்து ஷு லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவன் மீது கார் ஏறிச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் காமராஜ் நகரில் உள்ள கடந்த 24-ஆம் திகதி சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனின் ஷு லேஸ் அவிழ்ந்துவிட்டதால், அதை சிறுவன் கழற்றி மாட்டிக் கொண்டிருந்தான்.

அருகில் காரை இயக்கிய பெண், சிறுவன் இருப்பதை அறியாமல் காரை எடுத்து, அவன் மீது ஏறிச் சென்றார். இதனால் சிறுவன் டயரில் மாட்டாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

காருக்கிடையில் சிக்கிய போதும், அந்த சிறுவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மீண்டும், நண்பர்களுடன் சென்று விளையாடினான். இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியதையடுத்து, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்