திருமணமான 3 நாட்களில் மணப்பெண்ணின் முடிவு: மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட கணவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்லதுரை - தீபா ஆகிய இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பின்னர், தனது கணவர் வீட்டுக்கு வந்த தீபா, அங்கு கழிவறை இல்லை என்பதை தெரிந்துகொண்டார்.

கழிவறை இல்லாத வீட்டில் என்னால் வாழ இயலாது. நான் எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கூறிவிட்டு தனது கணவனை விட்டு பிரிந்துசென்றுவிட்டார்.

தீபாவை சமாதானம் செய்ய செல்லதுரை முயன்றும் அவரது வீட்டில் வந்து வசிக்க தீபா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த செல்லதுரை தனது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனால் செல்லதுரையில் பெற்றோர் சோகத்தில் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்